அவள் எனக்கு இல்லை......

"போதும் அனைத்தையும் முடித்து கொள்வோம்", என்று புறம் திரும்பி கண் துளிகள் இட்டு சென்றால் அவள். கண்ணீர் கடல் என்னை சூழ்ந்து கொள்ள , தெரு முடிவில் அவள் மறைய கண்டேன்..... வெற்றிடம் என்னும் அழையா விருந்தாளி என் வீட்டிற்குள் நுழைய, சோக சுவாசமும், வலி பொருந்திய நெஞ்சில் இதயம் போடும் சோக மணிகளும் .... காதல் போட்ட கொண்டு இருந்த மெல்லின ராகங்களை மறைத்தன. திடீரென்று, அனைத்தும் நன்றாக போவது போல் உணர்ந்தேன், மூலையில் கிடந்த வோட்கா குப்பி ஓர கண்ணால் பார்த்து சிரித்தது. வோட்கா என்னும் மருத்துவர் மூலம் அவளை மறக்கலாம் என்று நினைத்து கொண்டிருந்த நான் ,என்னை அறியாமல் ஒவ்வொரு முறையும் காதல் என்னும் போதையில் மிதந்து கொண்டு தான் இருந்தேன். சிரித்து கொண்டே இருந்த வோட்கா குப்பிக்கு நன்றியை கூறி , சீரழிந்த என் வாழ்க்கையில் மாற்றம் வேண்டாம் என்று மனம் போட்ட சிறு கூச்சலை கேட்க கேட்க, நாட்கள் தேய்ந்தன. தாடி, என் வலியின் சின்னம் ஆனது.... என்னை சுற்றி உள்ள அனைத்தும் என்னை ஏளனமாக சிரித்தன.மனம்....அவளை அந்த ஒற்றை வார்த்தையில் கொச்ச படுத்த சொன்னது .... ஆனால் ஒரு நிமிடம் ...அவளை அப்படி அழைக்கலாமா?.... அவள் உன்னை விட்டு சென்றால் .... உனது வாழ்க்கையை சீரழித்தாள் .... இருப்பினும் , அவள் தந்த வலி உன் வாழ்க்கை போக்கை மாற்றியது ... உன்னை மனிதனாக மாற்றியது ... மேலும் சில வலிகளை தாங்க உன்னை அயூத்த படுத்தினால்.... இப்போது சொல்! அவளை அப்படி அழைக்கலாமா? .... நாட்கள் நீண்டன... நேரம் அனைத்தையும் பார்த்துக்கொள்ளும் ... என்று மனதை தேத்தி கொண்டேன் .... ஒரு நாள் வந்தது....வலி ஏதும் என் மனதை பாதிக்கவில்லை .....புது உணர்வு , புதிய விடியல் யாவும் என்னை வரவேற்றது ........ கடந்து செல்லும் நாட்களில் ... ஒரு வேளை அவள் எனக்கு இல்லை என்று கூறி.....என் மனமும் கடந்து சென்றது .. 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

She's not mine